/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் பங்குத்தொகை வசூலிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறல்
/
'ஜல் ஜீவன்' திட்டத்தில் பங்குத்தொகை வசூலிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறல்
'ஜல் ஜீவன்' திட்டத்தில் பங்குத்தொகை வசூலிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறல்
'ஜல் ஜீவன்' திட்டத்தில் பங்குத்தொகை வசூலிக்க முடியாமல் ஊராட்சிகள் திணறல்
ADDED : பிப் 15, 2024 06:17 AM
கம்பம்: 'ஜல் ஜீவன்' திட்ட நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் பொதுமக்கள் பங்குத் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையால் ஊராட்சி நிர்வாகங்கள் புலம்பி வருகின்றன.
ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வீடுதோறும் குடிநீர் இணைப்பு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென 'ஜல்ஜீவன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிகளில் அம்ரூத் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து 3 கோடி வரை ஊரின் மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தி ஊராட்சிகளில் கிணறு தோண்டுவது, ஆழ்துளை கிணறு அமைப்பது, பகிர்மான குழாய் பதிப்பது, மேல்நிலை தொட்டி கட்டுவது என பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிநீர் இணைப்புகள் இல்லாத வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பு வழங்க டெபாசிட் தொகை ரூ.2 ஆயிரம், ஒராண்டு குடிநீர் கட்டணம் ரூ.820, ஜல்ஜீவன் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 10 சதவீதம் வீட்டின் உரிமையாளரிமிருந்து வசூலிக்க வேண்டும். ஊராட்சிக்கு ரூ.1 கோடி என்றால், ரூ.10 லட்சம் பங்குத் தொகையை ஊராட்சி செலுத்த வேண்டும். அந்த 10 லட்சத்தை எத்தனை குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளார்களோ அவர்களிடமிருந்து தொகை வசூலிக்க வேண்டும்.
ஊராட்சிகளில் டெபாசிட் கட்டவும், ஒராண்டு கட்டணம் கட்டவுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் பங்குத்தொகை கேட்டால் தர மறுக்கின்றனர். உயர் அதிகாரிகளோ பங்குத்தொகையை செலுத்த நெருக்கடி தருகின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகங்கள் புலம்பி வருகிறது.

