/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவினர் எஸ்.பி.,யிடம் மனு

ADDED : ஜன 12, 2024 06:40 AM
தேனி : சென்னை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதால், தேனியில் இன்று (ஜன.,11) நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்காக வைக்கப்பட்ட கட்சிக் கொடி, பேனர்களை அகற்றி, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, ஆலோசனை கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவிடம் அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., கட்சியின் அதிகாரப் பூர்வ பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களும் பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். அம் மனுவையும் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (நேற்று) காலை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள மஹாலில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இதில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, கட்சியின் பெயர், கொடி, சின்னம், தோரணம், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.
இதனால் அ.தி.மு.க., கொடி, பிளக்ஸ் பேனரை அகற்றி, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், ஓ.பன்னீர்செலவம் தலைமையில் அ.தி.மு.க., பெயரை பயன்படுத்தி நடத்தப்படும் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரினர்.