/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி ஒன்றிய அலுவலக மின் இணைப்பு துண்டிப்பு; ரூ.52,097 செலுத்தியதற்கு தீர்மானம் நிறைவேற்றம்

ADDED : நவ 16, 2024 06:31 AM
தேனி : தேனி ஒன்றிய அலுவலகத்திற்கு கடந்த செப்டம்பரில் ரூ.54,597 மின் கட்டணத்தை செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் இணைப்பு பெற டெபாசிட் தொகை போக ரூ.52,097 செலுத்தி மின் இணைப்பு பெற்றதற்கான தீர்மானம் உட்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஒன்றிய கூட்டம் நேற்று தலைவர் சக்கரவர்த்தி (தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 'இதுநாள் வரை ஒத்துழைப்பு அளித்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் தலைவர் நன்றி தெரிவித்தார். 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மைதிலி, உதவிப் பொறியளார்கள் சுபா, பிரகிதீஸ்வரன், ஒன்றிய குழு அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.