/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு, தனியார் பஸ்கள் மோதல் காயமின்றி தப்பிய பயணிகள்
/
அரசு, தனியார் பஸ்கள் மோதல் காயமின்றி தப்பிய பயணிகள்
அரசு, தனியார் பஸ்கள் மோதல் காயமின்றி தப்பிய பயணிகள்
அரசு, தனியார் பஸ்கள் மோதல் காயமின்றி தப்பிய பயணிகள்
ADDED : அக் 24, 2024 05:45 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி முத்தனம்பட்டி அருகே எதிர் எதிர் திசையில் சென்ற அரசு டவுன் பஸ், தனியார் பஸ் மோதியதில் பயணிகள் காயமின்றி தப்பினர்.
தேனியில் இருந்து நேற்று முன் தினம் இரவு ஆண்டிபட்டி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை போடிதாசன்பட்டியைச் சேர்ந்த ஜானகிராமன் ஓட்டிச்சென்றார். முத்தனம்பட்டி அருகே சென்றபோது எதிர் திசையில் உசிலம்பட்டி கணவாய்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி என்பவர் தனியார் பஸ்சை அதிவேகமாக ஓட்டிச்சென்றார்.
தனியார் பஸ்சில் முன் பக்க டயர் வெடித்ததில் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் சென்டர் மீடியன் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்ற அரசு டவுன் பஸ் மீது மோதியது. அரசு டவுன் பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. டவுன் பஸ் டிரைவர், கண்டக்டருக்கும் பாதிப்பு இல்லை.
தனியார் பஸ் ஓட்டிச் சென்ற ஆண்டிச்சாமிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. டவுன் பஸ் டிரைவர் ஜானகிராமன் கொடுத்த புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்