/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் இருந்து கோவை திருப்பூருக்கு பஸ் இன்றி தவிப்பு நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள்

ADDED : ஜூன் 09, 2025 02:51 AM
தேனி: தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப் படாததால் பயணிகள் தவிப்பிற்கு ஆளாகினர்.
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் மூன்று பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து கோவை, திருப்பூர், டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் கோயில் கும்பாபிஷேகங்கள், சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடந்தன.
இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேனிக்கு பொது மக்கள் வந்திருந்தனர். இதனால் காலையில் இருந்தே பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.
மாலையில் திருப்பூர், கோவை பஸ்கள் போதிய அளவில் இயக்கவில்லை. இதனால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையும் பகுதி, பைபாஸ் ரோடு சிவாஜிநகர் சந்திப்பு பகுதிகளில் பஸ்சில் இடம்பிடிக்க இப்பகுதிகளுக்கு செல்லும் மக்கள் காத்திருந்தனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பஸ் ஏறினர்.
வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.