/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனை வளாகம் டூவீலர் நிறுத்தும் இடமாக பயன்படுத்தும் அவலம் ஆண்டிபட்டியில் நோயாளிகள், டாக்டர்கள் அவதி

ADDED : செப் 21, 2024 06:20 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தை தனி நபர்கள் டூவீலர்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு ஆண்டிபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் 500 க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
உள் நோயாளிகளாகவும் 10க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தை தனி நபர்கள் டூவீலர்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதால் நோயாளிகள், டாக்டர்கள் வந்து செல்லும் வாகனங்கள்,ஆம்புலன்ஸ்க்கு இடையூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் தனி நபர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து, மருத்துவமனையின் மெயின் கேட்டை நிர்வாகத்தினர் பூட்டினர்.
சிறிய கேட் வழியாக நோயாளிகள், மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மூடப்பட்ட மெயின் கேட் முன்புறம் இருசக்கர வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்திவிட்டு செல்வதால் அவசரத்திற்கு நோயாளிகளை கொண்டு செல்லும் தனியார் வாகனங்கள், ஆம்புலன்ஸ் டாக்டர்களின் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்பவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவமனை முன்பும், வளாகத்திலும் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்பவர்கள் மீது மருத்துவமனை நிர்வாகமும் புகார் தருவதில்லை. அன்றாடம் நிகழும் இந்த இடையூறுகளுக்கு போலீசார், ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.