/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனையில் ரேடியோ கிராபர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி கூட்டம் அதிகரிப்பால் காத்திருக்கும் அவலம்

ADDED : டிச 26, 2024 05:34 AM
பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலான அதிநவீன 'டிஜிட்டல் எக்ஸ்ரே'கருவி உள்ளது.
இக்கருவி மூலம் உடலில் அனைத்து பகுதிகளையும் எலும்பு முறிவு பாதிப்பு குறித்து துல்லியமாக அறியலாம். தினமும் 120 முதல் 150 பேர் எக்ஸ்ரே எடுக்க வருகின்றனர். காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. அரசு கட்டணமாக ரூ.50 க்கு எக்ஸ்ரே எடுத்து பிலிம் வழங்கப்படுகிறது.
டெக்னீசியன் பற்றாக்குறை:
இங்கு மூன்று ரேடியோகிராபர்கள் பணியிடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார். இரு டெக்னீசியன் மூன்று உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் கூட்டம் அதிகரிப்பதால் ஒரே நாளில் எக்ஸ்ரே எடுக்க முடியாதநிலை உள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைக்கு உடனுக்குடன் எலும்பு முறிவு பற்றி அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ இணை இயக்குனர் எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.