/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி வடக்குமலை கிராமத்தில் மின்வசதியின்றி இருளில் தவிப்பு; தற்காலிகமாக சோலார் விளக்கு வசதி செய்ய வலியுறுத்தல்
/
போடி வடக்குமலை கிராமத்தில் மின்வசதியின்றி இருளில் தவிப்பு; தற்காலிகமாக சோலார் விளக்கு வசதி செய்ய வலியுறுத்தல்
போடி வடக்குமலை கிராமத்தில் மின்வசதியின்றி இருளில் தவிப்பு; தற்காலிகமாக சோலார் விளக்கு வசதி செய்ய வலியுறுத்தல்
போடி வடக்குமலை கிராமத்தில் மின்வசதியின்றி இருளில் தவிப்பு; தற்காலிகமாக சோலார் விளக்கு வசதி செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 27, 2025 06:59 AM

போடி: போடி வடக்குமலை - அத்தியூத்து மலைக் கிராமத்தில் வீடுகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு வசதி இல்லாததால் மக்கள் தவிக்கின்றனர். தற்காலிகமாக சோலார் விளக்கு வசதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வடக்குமலை கிராமம். அத்தியூத்து, இலங்காவரிசை, வலசத்துறை, உரல் மெத்து, சித்தாறு, சாமிவாய்க்கால், போதன் ஓடை உள்ளிட்ட உட்கடை மலைக் கிராமங்கள் அடங்கி உள்ளன. போடி மலை அடிவாரத்தில் இருந்து 12 கி.மீ.,தூரத்தில் வடக்குமலை கிராமம் உள்ளது.
500 விவசாய குடும்பங்களும், 100 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு காபி, இலவம், மா, ஏலம் போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். ஊராட்சிக்கு பல ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தியும் மின் வசதி இல்லை.
இங்கு மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் வசதி, தெருவிளக்கு வசதி இல்லாததால் இருளின் மூழ்கி கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மலைக் கிராமங்களில் இருளில் தவிக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் எதிர்பாராத விதமாக நோயால் பாதிக்கப்பட்டால் மருத்துவ வசதி பெற 12 கி.மீ., கடந்து போடிக்கு வர வேண்டும். போடி செல்ல முறையான ரோடு வசதி இல்லை.
உயிருக்கு போராடுபவர்களை 'டோலி' கட்டி தூக்கி வர வேண்டியுள்ளது.
மலைக்கிராம மக்களின் வாழ்வில் வெளிச்சம் கிடைத்திட தெருவிளக்கு, மின் வசதி அல்லது தற்காலிகமாக சோலார் விளக்கு அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வலசத்துறை - அத்தியூத்து பகுதியில் புதிய ரோடு அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மூலம் வன ஒப்படைப்பு செய்ய 12 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பின்னும் ரோடு அமைக்க வில்லை. விவசாயிகள் ரோடு வசதி கேட்டு வலியுறுத்தியதை தொடர்ந்து , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வலசத்துறை - அத்தியூத்து வரை ஒரு கி.மீ., ரோடு போடுவதற்கு 10 மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணி துவங்கும் நிலையில் உள்ளது. மலைகிராமங்களுக்கு மின்சாரம்,ரோடு வசதி செய்திட வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.