/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரம் உயரும் ஆண்டிபட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க மக்கள் எதிர்ப்பு அரசின் நலத்திட்ட உதவி பறிபோகும் என கருத்து

ADDED : நவ 21, 2024 05:08 AM
ஆண்டிபட்டி: தரம் உயர்த்தப்படும் ஆண்டிபட்டி நகராட்சியுடன் ஊராட்சி பகுதிகளை இணைப்பதால் அரசின் நலத்திட்டங்கள் பறிபோகும் என ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி என 18 வார்டுகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்டிபட்டி தேர்வு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சியாக தரம் உயர்த்த ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டத்தில் நவ.,11 ல் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள ஊராட்சிகளின் சில பகுதிகளை தரம் உயர்த்தும் நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டி.ராஜகோபட்டி ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகர், சீதாராம்தாஸ் நகர், பாப்பம்மாள்புரம் காந்தி நகர், சக்கம்பட்டி ஜெ.ஜெ., நகர் பகுதிகள் பேரூராட்சிக்கு மிக அருகில் இருப்பதால் தரம் உயர்த்தப்படும் நகராட்சியுடன் இணைக்கும் வாய்ப்புள்ளது.
ஊராட்சி பகுதி மக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அரசின் வீடு கட்டும் திட்டங்களில் பயனாளிகளாக பலரும் உள்ளனர். ஊராட்சிகளில் கிடைக்கும் சலுகைகள் பறிபோகும் என்பதால் நகராட்சியுடன் இணைக்க இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பகுதிகள் கிராமங்களை சார்ந்தே உள்ளது. தொழில் வாய்ப்பு இல்லை.
நகராட்சியாக தரம் உயரும் போது சொத்து வரி, குடிநீர் வரிகள் உயரும். இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஈடு செய்ய வாய்ப்பு இல்லை. எனவே,எதிர்க்கிறோம் என்றனர்.
டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஊராட்சிகளுக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகள் இணைக்கப்படும் என தகவல் இல்லை.
நவ., 23ல் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.