/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விநாயகர் சிலை வைக்க 863 இடங்களில் அனுமதி பாதுகாப்பு பணியில் 2800 போலீசார்

ADDED : ஆக 24, 2025 03:59 AM
தேனி: மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 863 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வல பாதுகாப்பு பணியில் 2800 போலீசார் ஈடுபட உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி ஆக.,27 ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைபெறும். விநாயகர் சதுர்த்தி, விஜர்சன ஊர்வல பாதுகாப்பு பற்றி போலீசார் கூறியதாவது:
மாவட்டத்தில் 863 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் வைத்துள்ள இடத்தில் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பெரியகுளத்தில் ஆக.,27 மாலையும், தேனி, ராயப்பன்பட்டி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், கூடலுார், தேவாரம், பாளையம், கோம்பை, போடியில் ஆக.,28, சின்னமனுாரில் ஆக.,29ல் விஜர்சன ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தின் போது 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிலைகள் வைக்கும் பகுதியில் பிரச்னைகள் இன்றி வழிபாடு நடத்துதல், மோதலை ஏற்படுத்தும் வகையில் பாடல்கள், நிகழ்ச்சிகள் இடம் பெற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.