நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான
வட்டக்கானல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது.
ஜன.8 மாலையில் கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஜன.9 முதல்சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.11ல்) அருவிப்பகுதியில் நீர்வரத்து சீரானதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.