/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிரைவர்கள் சங்கத்தினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
/
டிரைவர்கள் சங்கத்தினர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ADDED : ஜன 04, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் கனரக வாகன டிரைவர்கள் நலச்சங்க தலைவர் செந்தில்குமார், அனைத்து வாகன டிரைவர்கள் தொழிற்சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் டிரைவர்கள் மனு அளித்தனர்.
மனுவில், 'புதிய ஹிட் அண்ட் ரன்' சட்ட திருத்தத்தால் டிரைவர்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும். இதனால் அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஜன., 18 ல் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றிருந்தது. முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு அளித்தனர். நிர்வாகிகள் சதிஷ், பன்னீர்செல்வம், உசேன்கான், மாரிச்சாமி, டிரைவர்கள் உடனிருந்தனர்.