/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு எஸ்.பி.,யிடம் மனு
/
டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு எஸ்.பி.,யிடம் மனு
ADDED : செப் 19, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களாமேடு திட்டச்சாலை சடையால் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் எஸ்.பி.,சிவபிரசாத்திடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் குடியிருப்பு பகுதி தேனி நகராட்சியின் 31வது வார்டில் உள்ளது. இங்கு சடையால் கோயில் அருகே டாஸ்மாக் அமைக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. கலெக்டர், டாஸ்மாக் மேலாளரிடம் அந்த இடத்தில் டாஸ்மாக் அமைக்கக்கூடாது என மனு அளித்துள்ளோம். ஆனால் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க உள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனால் இக்கோயிலுக்கு வரும் பெண்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்பிற்குள்ளாவார்கள். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என கோரினர்.

