/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடுக்கம் - கொடைக்கானல் ரோட்டை அகலப்படுத்த மனு
/
அடுக்கம் - கொடைக்கானல் ரோட்டை அகலப்படுத்த மனு
ADDED : ஆக 16, 2025 02:57 AM
தேனி: பெரியகுளம் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், ராஜா, பாலசுப்பிர மணியன், ராஜவேலு, முரளி ஆகியோர் நேற்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
கொடைக்கானலுக்கு பெரியகுளம் கும்பக்கரை ரோடு, அடுக்கம்பெருமாள்மலை வழியாக கார், வேன்கள் மூலம் சென்றுவருகின்றனர். கொடைக்கானல் செல்வதற்கான பயண நேரம் 1 மணி நேரம் 30 நிமிடங்களாகும். காட்ரோடு வழியாக கொடைக்கானல் சென்றால் 38 கி.மீ., கூடுதலாக பயணிக்க வேண்டும். அதனால் பெரியகுளம் அடுக்கம் வழியாக கொடைக்கானல் ரோட்டை அகலப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் தெரிவித்தார்.