/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
18ம் கால்வாய் தண்ணீர் திறக்க கோரி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 19, 2025 02:30 AM
தேவாரம்: விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி போடி அருகே சங்கராபுரத்தில் விவசாயிகள் நேற்று தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உத்தமபாளையம், தேவாரம், சங்கராபுரம், போடி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு 18ம் கால்வாய் தண்ணீரை நான்கு ஆண்டுகளாக திறந்து விடவில்லை. 18ம் கால்வாய் நீர் வரத்து பாதை தூர் வாரப்படாததால் முட்புதர் சூழ்ந்து உள்ளன. இதனை நம்பி உள்ள கண்மாய்கள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளில் நீர் இன்றி உள்ளன. இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட கோரி சங்கராபுரம், போடி, தேவாரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனை ஒட்டி நேற்று, விவசாயிகள் 18ம் கால்வாய் தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி, சங்கராபுரத்தில் அகில இந்திய மக்கள் உதவி கரங்கள் நிறுவன தலைவர் ராஜசேகரன் தலைமையில் விவசாயிகள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.