ADDED : செப் 21, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பாண்டில் 25 ஆயிரம் பனைவிதைகள், 277 பனை கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவை நுாறு சதவீத மானியத்தில் வழங்கப்பட் உள்ளது. தனி நபருக்கு அதிகபட்சம் 50, தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்களுக்கு அதிகபட்சம் 100 பனைவிதைகளும் வழங்கப்பட உள்ளது.
அதே போல் பனை கன்றுகள் தனிநபருக்கு 15, குழுக்களுக்கு 30 வழங்கப்படும். பயனடைய விரும்புவோர் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.