/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுாரில் 76 ஆயிரம் பனை விதைகள் நடவு
/
சின்னமனுாரில் 76 ஆயிரம் பனை விதைகள் நடவு
ADDED : நவ 10, 2024 04:54 AM
சின்னமனூர், : சின்னமனூரில் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை கம்பம் தீர்த்தம் டிரஸ்ட், சின்னமனூர் ரோட்டரி சங்கம், கிரீன் சங்கம் மற்றும் சென்ட்ரல் சங்கம், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இங்குள்ள சங்கிலித்தேவன் கண்மாய், விஸ்வக்குளம் கண்மாய் வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா பனை விதையை நடவை துவக்கி வைத்து பேசுகையில், தேனி மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதுவரை 76 ஆயிரம் நடவு செய்துள்ளோம். நடவு செய்ததோடு அதை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் இதில் ஈடுபட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அய்யம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.