/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு விடுதியில் சேர வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
/
விளையாட்டு விடுதியில் சேர வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதியில் சேர வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதியில் சேர வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 24, 2025 06:13 AM
தேனி: தமிழகத்தில் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்படுகிறது.
இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் www.sdat.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7,8,9,11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மே 5 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில்பங்கேற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 7 ல் போட்டியும், மாணவிகளுக்கு மே 8 போட்டிகளும் நடைபெறும். மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சென்னையில் மே 12ல் போட்டி நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.