தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்


ADDED : செப் 18, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி : மாவட்டத்தில் பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நேரு யுவகேந்திரா சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.

தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் துாய்மை பணிகள் மேற்கொண்டனர். பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிள், தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர்.

நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கூடலுார்: நகரத் தலைவர் சந்தனகுமார் தலைமையில் பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டது.

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் மோடி பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில் பிரதமரின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பா.ஜ., நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பா.ஜ.,நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமை வகித்தார்.

ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திக், வடக்கு ஒன்றிய தலைவர் நந்தினி முன்னிலை வகித்தனர். மத்திய அரசு வழக்கறிஞர் குமார், சமூக ஆர்வலர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் பரமன் பேசினர்.

பா.ஜ., ஒன்றிய மகளிர் அணி பொறுப்பாளர் இந்திரா மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து பால விநாயகர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பெரியகுளம்: பா.ஜ.,கட்சியினர் பிரதமர் மோடி பெயரில் கோயில்களில் அர்ச்சனை செய்து, இனிப்பு வழங்கினர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாமும், மனநலப்பிரிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பா.ஜ.,மாநில சமூக ஊடக செயலாளர் வசந்தபாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் துவக்கி வைத்தார். நகர தலைவர் திவ்யா, நிர்வாகிகள் கணேஷ்குமார், சாமிநாதன், முத்துப்பாண்டி, வீரபத்திரன், சஞ்சீவி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us