/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்சோ வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம் மீண்டும் கைது
/
போக்சோ வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம் மீண்டும் கைது
போக்சோ வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம் மீண்டும் கைது
போக்சோ வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம் மீண்டும் கைது
ADDED : ஜன 11, 2025 05:21 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டி, வெட்டுக்காடு பகுதியை சேர்ந்த ஏழுவாசகன் 28, ரிமாண்டிற்கு கொண்டு செல்லும் போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.
சுருளி அருவி அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியின் 9 வது வார்டு வெட்டுக் காடு பகுதியில் வசிக்கும் சமையன் மகன் ஏழுவாசகன். கூலி தொழிலாளி . 2022 ல் சிறுமியை திருமணம் செய்தார்.
இது குறித்து குழந்தை திருமணம் தடுப்பு பிரிவினர் கடந்தாண்டு நவம்பரில் போலீசில் புகார் செய்தனர்.
உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, ஏழுவாசகனை தேடினர். தலைமறைவாக இருந்தவரை நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர். மாலையில் தேனி போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தமபாளையம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி , போலீஸ் ஸ்டேசனில் ஜீப்பில் ஏற்றிய போது ஏழுவாசகன் போலீசாரை தள்ளிவிட்டு தப்பினார். பின் வெட்டுக் காடு பகுதியில் போலீசார் மறைத்திருந்து இரவில் வீட்டிற்கு வந்தவரை பிடித்தனர். நேற்று தேனி போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்.