/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்சோ தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை
/
போக்சோ தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை
ADDED : அக் 19, 2024 11:40 PM
பெரியகுளம் : போக்சோ வழக்கில் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் 10 ஆண்டு தண்டனை பெற்ற பழனிசாமி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்த நிலையில் அங்கேயும் தீர்ப்பு பாதகமாக வரும் என நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மருகால்துறை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி 55. இவர் 2019ல் போக்சோ வழக்கில் கைதானார். 2021 ல் தேனி மாவட்டம் மகிளா நீதிமன்றம் பழனிசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. மகிளா நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். சில மாதங்களாக நிபந்தனை ஜாமினில் வந்தவர் வாரம் ஒரு முறை தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
மேல்முறையீடு வழக்கில் தனக்கு பாதகமான தீர்ப்பு வரும் என சமீபகாலமாக மன உளைச்சலில் இருந்தார்.
இவர் மருகால்துறை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.