/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
/
ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
ADDED : செப் 17, 2025 03:34 AM
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மேட்டுவளவு, அரிசிக்கடை சந்திப்பு, காட்ரோடு பகுதி ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், தேவதானப்பட்டி எஸ்.ஐ., தங்கவேல்சாமி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது இன்ஸ்பெக்டர் கூறுகையில்: ஆட்டோ ஓட்டுவதற்கு லைசென்ஸ் அவசியம் வைத்திருக்க வேண்டும். காக்கிச்சட்டை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவிற்கு புகை சான்றிதழ், தகுதி சான்றிதழ், காப்பீட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது. அலைபேசி பேசியவாறு ஆட்டோ ஓட்டக்கூடாது.அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்றும்,விதிறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.-