/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் மானபங்க முயற்சி போலீஸ் விசாரணை
/
பெண் மானபங்க முயற்சி போலீஸ் விசாரணை
ADDED : டிச 07, 2024 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள் 48.இவரது மனைவி பரமேஸ்வரி 44. மூன்று பிள்ளைகள் உள்ளனர். அருள் டீக்கடை வைத்துள்ளார்.
பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த போது, அதே தெருவைச் சேர்ந்த மணிகண்டன் 22. பரமேஸ்வரி வீட்டிற்குள் சென்றார். வெளியே வந்த பரமேஸ்வரியை தலைமுடியை பிடித்து மானபங்கம் செய்ய முயன்று தள்ளி விட்டார்.
பரமேஸ்வரி சத்தம் கேட்டு நேரு என்பவர் ஓடி வந்துள்ளார்.
உடனே மணிகண்டன் தப்பினார். காயமடைந்த பரமேஸ்வரி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, மணிகண்டனை தேடி வருகிறார்.