/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாட்டு வெடி குறித்து போலீஸ் விசாரணை
/
நாட்டு வெடி குறித்து போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 31, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியை சேர்ந்த முருகன். பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில அமைப்புச் செயலாளர். தேனி பைபாஸ் ரோட்டில் உள்ள திருநகரில் வீடு கட்டி சமீபத்தில் கிரகபிரவேசம் நடத்தினார்.
நேற்று முன்தினம் என வீட்டின் முன் கவரில் வெடிகுண்டுகள் இருப்பதாக காவலாளி தெரிவித்தார் என போலீசில் புகார் கூறினார். உடனே வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் வீடு கிரகபிரவேச விசேஷத்திற்காக உறவினர்கள் வாங்கிய நாட்டு வெடிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
வீடியோ பதிவில் எவ்வித ஆதாரங்களும் இல்லை. மேலும், பட்டாசு ஒன்றும் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது ஆய்வில் தெரியவந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்தனர்.