அரசு பஸ் மோதி முதியவர் பலி
தேனி: பெரியகுளம் அழகாபுரி கிழக்குத்தெரு ராமு 60. இவர் மதுராபுரி அருகே திண்டுக்கல்-குமுளி பைபாஸ் ரோட்டில் உள்ள மது பார் அருகே ரோட்டை கடந்தார். தேனி நோக்கி வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே ராமு இறந்தார். இறந்தவரின் மகன் பாண்டியராஜன் புகாரில் பஸ் டிரைவர் சின்னமனுார் மார்க்கையன் கோட்டை கருத்தபாண்டியன் மீது அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கார் மோதி வாட்ச்மேன் காயம்
தேனி: வடபுதுப்பட்டி ஜெ.ஜெ., காலனி முத்துப்பெருமாள் 35. இவர் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் ரோட்டில் உள்ள தனியார் அபார்ட்மென்டில் வாட்ச் மேனாக பணிபுரிந்தார். வேலை முடித்து திரும்பியவர் திண்டுக்கல்-குமுளி பை பாஸ் ரோட்டில் ஏ.வி.பி., நகர் அருகே நின்றிருந்தார். கர்நாடகாவில் இருந்து சுற்றுலா சென்ற காரை கர்நாடகா மாநிலம் அவரி மாவட்டம் திப்பீஸ் பவர் ஓட்டினர். அந்த கார் முத்துப்பெருமாள் மீது மோதியது. காயமடைந்தவரைஅரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காயமடைந்தவர் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.