நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வடபுதுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி ஆனந்தி. இத்தம்பதிக்கு 9 மற்றும் 7 வயது மகள்கள், 5 வயது மகனும் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஆனந்தி, தனது 3 பிள்ளைகளுடன், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
மே 19ல் இரவு இரு குழந்தைகளுடன் தாய் ஆனந்தி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. ஆனந்தியின் தந்தை முருகேசன் புகாரில், அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.