ADDED : மார் 28, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் மாயம்
தேனி: அல்லிநகரம் தென்றல் நகர் தங்கபாண்டியன், இவரது மனைவி கவிதா. குடும்பத் தகராறில் கவிதா வீட்டை விட்டு வெளியே சென்றார். தங்கபாண்டியன், வீரபாண்டியில் உள்ள மாமனார் சின்னமுருகனுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர் வீடுகளில் தேடியும் கவிதா பற்றி தகவல் தெரியவில்லை. சின்னமுருகன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி சீட்டு, பணம் பறிமுதல்
தேனி: தேனி போலீஸ் எஸ்.ஐ., மலைச்சாமி தலைமையில் போலீசார் பெரியகுளம் ரோட்டில் வார சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நக்கலப்பட்டியை சேர்ந்த ஆனந்த 32, என்பவரை விசாரித்தனர். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட ரூ.39 ஆயிரத்து 320 மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுக்கள், பணம் ரூ.1.17 லட்சம், அலைபேசியை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.