டூவீலர் திருட்டு
தேனி: பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெரு முத்துப்பாண்டி 38. இவர் பூதிப்புரம் ஆயில் மில்லில் தொழிலாளியாக உள்ளார். தனது தந்தையின் டூவீலரை பயன்படுத்தி வந்தார். கடந்த மார்ச் 19ல் டூவீலரை, வீட்டின் அருகே நிறுத்திவிட்டு, வெளியூர் சென்றார். மீண்டும் ஏப். 1ல் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் காணவில்லை.
கணவனை பிரிந்த பெண் மாயம்
தேனி: கருவேல்நாயக்கன்பட்டி கலெக்டர் ஆபீஸ் முதல் தெரு பாக்கியராஜ் 32. இவரது மனைவி ரேணுகாதேவி 27.இத்தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் கருத்துவேறுபாடால் கணவனை விட்டு பிரிந்த ரேணுகாதேவி, தந்தை ராஜாங்கம் வீட்டில் வசிக்கிறார். டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சென்றார். நேற்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. போலீசார் தேடி வருகின்றனர்.
மதுபாட்டில் பதுக்கியவர் கைது
தேனி: பங்களாமேடு நகராட்சி கட்டண கழிப்பறை அருகே எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடி சிங்கராஜபுரம் ஆசை 45, ரூ.1740 மதிப்புள்ள 24 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். ஆசையை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

