வீட்டை உடைத்து திருட்டு
தேனி: பெரியகுளம் தாலுகா எ.புதுப்பட்டி நடுத்தெரு விமல் 32. பில்டிங் ஒப்பந்ததாரர். வீட்டின் பீரோவில் ரூ.1.60 லட்சம் வைத்திருந்தார். ஜூலை 8ல் காலையில் பணிக்கு சென்றார். மனைவி பிரியங்கா காலை 11:00 மணிக்குடிரைவிங் ஸ்கூலுக்கு சென்றார். அப்போது பீரோவை பூட்டி, சாவியை சமையலறையில் வைத்து விட்டு, வீட்டை பூட்டி சாவியை வழக்கமான இடத்தில் வைத்து சென்றார். மதியம் 12:00 மணிக்கு வந்தபோது வீட்டின் சாவி,வேறு இடத்தில் இருந்துள்ளது. பீரோ திறந்து அதில் இருந்த ரூ.1.60 லட்சம் திருடுபோனது. விமல் புகாரில் பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.தங்க நகை திருட்டு
தேனி: ஆண்டிபட்டி சண்முகசுந்தரபுரம் காளியம்மன் கோயில் தெரு மகாராணி 29. கார்மெனட்ஸ் பணியாளர். இவரது கணவர் மாரிச்சாமி கொத்தனார்.2 மகன்கள் உள்ளனர். ஜூலை 6ல் வீட்டில் இருந்த பீரோவை மகாராணி திறந்து பார்த்துள்ளார். லாக்கர் உடைந்த நிலையில் உள்ளே இருந்த தங்க மோதிரம், தோடு, தாயத்து உட்பட ரூ.33,500 மதிப்புள்ள 9 கிராம் தங்க நகைகள் திருடு போயிருந்தன. மகாராணி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கிறார்.
விரக்தியில் தற்கொலை
தேனி: பெரியகுளம் வடகரை இந்திராகாந்தி தெரு பிச்சைமணி 62. இவருக்கு புவனேஸ்வரி, ஒச்சம்மாள் என 2 மனைவிகள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதல் மனைவி புவனேஸ்வரி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி ஒச்சம்மாளுடன் பிச்சைமணி வசித்து வந்தார். ஒச்சம்மாள் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்து சென்றார். இதனால் பிச்சைமணி வேதனையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். முதல் மனைவியின் மகன் செந்தில் புகாரில் பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.