ADDED : ஆக 17, 2025 12:15 AM
பெண் மாயம்
தேனி: வடபுதுப்பட்டி வீருசின்னம்மாள் கோவில்தெரு ஈஸ்வரி. இவரது மகள் ஆர்த்தி. கணவர் அலகேஷ்பாண்டி. தாய் வீட்டில் இருந்த ஆர்த்தி மாமனார் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஈஸ்வரி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயம்
தேனி: மீனாட்சிபுரம் முருகன் 53. குச்சனுார் துரைசாமிபுரத்தில் வசிக்கும் மகள் செல்வராணி வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து மகள், பேரன்களுடன் டூவீலரில் புறப்பட்டார். பாலர்பட்டி அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த பிரவீன் ஓட்டி வந்த ஆட்டோ டூவீலரில் மோதியது. முருகன், பேரன் கபிலேஸ்வரன் 5 காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூ வீலர் மோதி முதியவர் பலி
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டி காமாட்சி 70. டீக்கடையில் டீ குடிக்கச் சென்றுள்ளார். கெங்குவார்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார் டூவீலரில் காமாட்சி மீது மோதினார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காமாட்சி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் நவீன்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டாசு கடையில் திருட்டு
பெரியகுளம்: அழகாபுரி ஏ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 34. தேனி பெரியகுளம் ரோடு ஏ.மீனாட்சிபும் குறுக்கு ரோட்டில் பட்டாசு கடை வைத்துள்ளார். மர்மநபர்கள் கடையின் கதவை உடைத்து, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சிசிடிவி கேமரா, டி.வி., உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். தென்கரை போலீசார் விசாரணை செய்கின்றனர்.