sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஆக 19, 2025 12:43 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோட்டார் ஒயர் திருட்டு

தேனி: கோம்பை காமராஜர் தெரு தீனதயாளன் 70. ஊரில் மேற்கு பகுதியில் உள்ள சின்ன ஒழுகால் பாதை அருகே இவருக்கு தென்னந்தோப்பு உள்ளது. தோப்பில் உள்ள ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் ஒயரை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். தீனதயாளன் புகாரில் கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலை மிரட்டல் மைத்துனர் மீது வழக்கு

தேனி: கோ ம்பை அரண்மனைத் தெரு ராஜேஷ் 33. இவருக்கும் உத்தமபாளையம் தண்ணீர் தொட்டித் தெரு காளீஸ்வரகுமாரின் தங்கை நித்யலட்சுமிக்கும் 3ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பின் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளீஸ்வரகுமார், ராஜேஷின் வீட்டின் முன் நின்று திட்டி தகராறில் ஈடுபட்டு, ராஜேஷை தாக்கி கீழே தள்ளினார். தட்டிக்கேட்ட ராஜேஷின் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். புகாரில் கோம்பை போலீசார் காளீஸ்வரகுமார் மீதுவழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கஞ்சா பதுக் கி யவர் கைது

தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் கம்பம் முதல் ஊத்துக்காடு புளியந்தோப்புபகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கம்பம் உத்தமபுரம் உலகத்தேவர் முதல் தெரு குபேந்திரன் 46, ரூ.1200 மதிப்புள்ள 120கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர். இவர் மீது தேனி போதைப் பொருள்நுண்ணுறிவு சிறப்பு பிரிவில் 5 கஞ்சா வழக்குகள் விசாரணை முடிந்துள்ளது. உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவில்மூன்று வழக்குகள் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கார் கண்ணா டி உடைத்தவர் கைது

தேவதானப்பட்டி: பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் பீர்முகமது 27. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரியாஜ்தீன் 25. மது போதையில் பொதுஇடங்களில் தகராறு செய்துள்ளார். இதனை பீர்முகமது கண்டித்தார். முன் விரோதம் காரணமாக ரியாஜ்தீன் அரிவாளால் பீர்முகமது கார் கண்ணாடியை உடைத்தும், அருகிலிருந்த அகமது என்பவரின் வேனை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். பெட்டிக்கடை வைத்திருந்த காதர்ஒலி சத்தம் போட்டுள்ளார். இதனால் அவரது பெட்டிக்கடையையும் ரியாஜ்தீன் உடைத்தார். பீர்முகமது புகாரில், தேவதானப்பட்டி போலீசார் ரியாஜ்தீனை கைது செய்தார்.

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆண்டிபட்டி: கொப்பையம்பட்டியை சேர்ந்தவர் குமார் 51, கூலித் தொழிலாளி, இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே பாதையை கடக்க முயன்றுள்ளார். காலை 9:25 மணிக்கு மதுரையில் இருந்து போடி சென்ற ரயில் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டை உடைத்து நகை திருட்டு

ஆண்டிபட்டி: க.விலக்கு அருகே பிஸ்மி நகரை சேர்ந்தவர் தயாளன் 60, ஆகஸ்ட் 14ல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் குடியிருக்கும் வசந்தா என்பவர் அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த இரும்பு பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 750 மதிப்பிலான 6 எண்ணிக்கை கொண்ட நகைகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. தயாளன் கொடுத்த புகாரில் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தாய், மகன் மீது போக்சோ வழக்கு

போடி: சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் நாகராஜ் 28. இவர் கேரளா பாரத்தோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, மூன்று மாதங்களுக்கு முன்பு கடத்தி வந்து போடியில் திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். போடி அனைத்து மகளிர் போலீசார் நாகராஜ், சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்த நாகராஜ் தாயார் குருவலட்சுமி மீது போடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us