மாணவி மாயம்
தேனி: அல்லிநகரம் முனியம்மாள். இவரது மகள் ராமுத்தாய் திருமங்கலத்தில் வசிக்கிறார். இவரது 15 வயது மகள் முனியம்மாள் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். ஆக.27ல் பள்ளி விடுமுறையில் இருந்தவர் வீட்டில் இருந்து மாயமானார். முனியம்மாள் ராமுத்தாயிக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொத்தனார் காயம்
தேனி: அல்லிநகரம் ஒண்டிவீரன் காலனி கொத்தனர் வீராச்சாமி 45. இவர் தேனி - பெரியகுளம் ரோட்டில் சுக்குவாடன்பட்டி அருகே மது போதையில் ரோட்டை கடந்து சென்றார். அவ்வழியாக அல்லிநகரம் சுரேஷ் ஓட்டி சென்ற டூவீலர் வீராச்சாமி மீது மோதியது. காயமடைந்த வீராச்சாமி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் ரோட்டை கடந்தவர்கள் காயம்
தேனி: அல்லிநகரம் ஈஸ்வரன் கோயில் தெரு அச்சக உரிமையாளர் மணிவண்ணன். இவரது மனைவி கவிதா, குழந்தையுடன் சுக்குவாடன்பட்டி ஜெயம் நகர் அருகே பெரியகுளம் ரோட்டை டூவீலரில் கடந்தார். அப்போது ஜெயம் நகரை சேர்ந்த பிரகாஷ் ஓட்டி வந்த கார், மணிவண்ணன் டூவீலரில் மோதி விபத்து நடந்தது. இதில் மணிவண்ணன், கவிதா காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மணிவண்ணன் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள் விற்றவர் கைது
தேனி: கடமலைக்குண்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தங்கமாள்புரம் கருப்பசுவாமி கோயில் அருகே சென்ற போது சிங்கராஜபுரம் விநாயகர் கோயில் தெரு மதனை 43, விசாரித்தனர். அவர் அனுமதி இன்றி விற்பனைக்காக வைத்திருந்த 80 மதுபாட்டில்களை கைப்பற்றி, மதனை கைது செய்தனர்.