ADDED : ஆக 31, 2025 04:21 AM
இருதரப்பு மோதல்
6 பேர் மீது வழக்குதேனி: கூழையனுார் இந்திரா காலனி சுருளி, பாண்டியன் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் மைக் செட் அமைப்பதில் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் பாண்டியன் மகன் பரத், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சென்று வந்த பின் டிராக்டரில் இருந்து மைக் செட் உள்ளிட்டவற்றை அகற்றி கொண்டிருந்தார். அங்குவந்த சுருளி தரப்பினருக்கும், பரத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். சுருளி மகன் சின்னகருப்பன் புகாரில் பரத் மீதும், பரத் புகாரில் சுருளி, சின்னகருப்பன், கவிதா, வளர்மதி ஆகிய நால்வர் மீது வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த தகராறில் பரத்திற்கு ஆதரவாக அவரது நண்பர் விக்னேஷ் தகராறில் ஈடுபட்டார். அவர் ஜாதிபெயரை சொல்லி திட்டி, தாக்கி கொலை மிரட்டல் கவிதா விக்னேஷ் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.
நாய் குறுக்கே வந்ததில்
வங்கி மேலாளர் பலிதேனி: தேவாரம் நாடார் தெரு மணிக்குமார் 30. தேனியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவர் ஆக.,28 இரவு பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். சடையால்பட்டி அருகே சென்றபோது டூவீலர் குறுக்கே நாய் சென்றது. இதனால் டூவீலரில் இருந்து நிலைதடுமாறி மணிக்குமார் கீழே விழுந்தார். (ெஹல்மெட் அணியவில்லை) ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மனைவி ஜெயஸ்ரீ புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.