/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுமுறையின்றி தொடர் பணியால் மன உளைச்சலில் தவிக்கும் போலீசார்
/
விடுமுறையின்றி தொடர் பணியால் மன உளைச்சலில் தவிக்கும் போலீசார்
விடுமுறையின்றி தொடர் பணியால் மன உளைச்சலில் தவிக்கும் போலீசார்
விடுமுறையின்றி தொடர் பணியால் மன உளைச்சலில் தவிக்கும் போலீசார்
ADDED : செப் 01, 2025 02:37 AM
தேனி: மாவட்டத்தில் விடுமுறை இன்றி, தொடர்ந்து பணிபுரிவதால் மன அழுத்தம் அதிகரிப்பதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் வார விடுமுறை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு மேலாக போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு வார விடுமுறை வழங்காததால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். போலீசார் சிலர் கூறியதாவது: மாவட்டத்தில் பல போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை நிலவுகிறது. அதிலும் சில ஸ்டேஷன்களில் போலீசார் தேவையின் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தாலும், பலர் விடுப்பில் உள்ளனர். இதனால் பணியில் உள்ளவர்கள் கூடுதல் பணிச்சுமையால் தவிக்கிறோம். அது தவிர ஜூலையில் இருந்து தொடர்ந்து கோயில் திருவிழாக்கள், பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணி என தொடர்ந்து பணிபுரியும் சூழல் உள்ளது. இதனால் பல போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசாருக்கு வார விடுமுறை என்பது கானல் நீராகிவிட்டது. வரும் நாட்களிலும் பாதுகாப்பு பணிக்காக வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலருக்கும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும் குறைந்து விட்டது. குறைந்த பட்சம் வார விடுமுறை அல்லது மாதம் இருநாட்கள் விடுமுறை வழங்கவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.