/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்திரிகையாளர்களுக்கு தகவல் அளிக்க இழுத்தடிக்கும் போலீஸ் தேனி எஸ்.பி., நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

ADDED : செப் 28, 2024 05:48 AM
கம்பம், : தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேசன்களில் சமீபமாக வழக்கு பற்றிய விபரங்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதில் கடுமையான போக்கை கையாள்வது வேதனை அளிக்கிறது.
அரசின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே தகவல் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு சாதாரண இந்திய குடிமகனுக்கும் நிர்வாக ரீதியான விஷயங்கள் அரசின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள உரிமை உண்டு. ஆனால் சமீப காலங்களில் தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் எந்த தகவல் கேட்டாலும் பத்திரிகையாளர்களுக்கு தர மறுக்கும் நிலை உள்ளது.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணை நடைபெறுகிறது என்ற ஒருவரி பதல் மட்டுமே கூறுகின்றனர். விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து, ரிமாண்டிற்கு சென்ற பின்பும் போலீஸ் ஸ்டேஷன்களில் அதன் விபரங்களை வழங்க மறுக்கும் சூழல் உள்ளது.
இந்த நடவடிக்கைகள் பத்திரிகையாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தேனி எஸ்.பி. சிவபிரசாத் இந்த விசயத்தில் தலையிட்டு தீர்வு காண் வேண்டும்.
ஒரு வழக்கில் விசாரணை முடிந்து கோர்ட்டிற்கு கொண்டு சென்ற பின் முழுமையான தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.