/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.50 லட்சம் சேலை உற்பத்தி பாதிப்பு
/
விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.50 லட்சம் சேலை உற்பத்தி பாதிப்பு
விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.50 லட்சம் சேலை உற்பத்தி பாதிப்பு
விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.50 லட்சம் சேலை உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜன 02, 2025 09:35 PM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். இரு நாட்களில் ரூ.50 லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
டி.சுப்புலாபுரத்தில் 2000 விசைத்தறிகளில் 4000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தற்போது தைப்பொங்கல் சீசன் என்பதால் காட்டன் ரக சேலைகளுக்கு தேவை அதிகரித்து உற்பத்தியில் விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் 2024 டிச.,31 ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜன., 1 முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். தங்கள் கோரிக்கை குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் தகவல் தெரிவித்தும் கூலி உயர்வுக்கான முடிவு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். 4000 தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதித்திருப்பதுடன் ரூ.50 லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தியும் பாதித்துள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் பிரச்சினை குறித்து மனுக்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.