/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யூரியாவை குறைத்து பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்க பயிற்சி
/
யூரியாவை குறைத்து பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்க பயிற்சி
யூரியாவை குறைத்து பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்க பயிற்சி
யூரியாவை குறைத்து பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்க பயிற்சி
ADDED : செப் 25, 2024 06:22 AM
கம்பம் : யூரியா பயன்பாட்டை குறைத்து பசுந்தாள் உர மேலாண்மையை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
பூச்சிக்கொல்லி மருந்துகள்,உரங்கள் பயன்பாட்டால் மண் வளம் பாதித்து மகசூல் குறைந்தும், நன்மை தரும் புழு, பூச்சிகள் குறைகிறது. இதில் மனித உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சணப்பு, தக்கைப் பூண்டு, பயறு வகை பயிர்களை விதைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை மடக்கி உழுவதன் மூலம், யூரியா பயன்பாட்டை குறைக்கலாம.
எனவே விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ரசாயனம் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாட்டை தடுக்கவும் வேளாண்,தோட்டக்கலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள வேளாண் பயிற்சி மையத்தில் பசுந்தாள் உரங்கள் பற்றிய பயிற்சி தோட்டக்கலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற கம்பம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பாண்டியன் ராணா கூறுகையில், உரங்களுக்கு கொடுக்கும் மானியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால்மண்ணின் வளம், மனித நலனும் பாதிக்கப்படுகிறது. எனவே மண்ணின் வளம், மனித நலன் காக்க ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்க பயிற்சி தரப்பட்டது.
குறிப்பாக பாசிப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை விதைத்து பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்தால், அந்த நிலத்திற்கு யூரியா போட தேவை இருக்காது. இது தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த எங்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது என்றார்.