
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு பிரதோஷம் பூஜை நடந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
காளஹஸ்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் கோயில், பாலசுப்பிரமணியர் கோயில், இந்திராபுரித்தெரு சிவனேஸ்வரர் தையல் நாயகி அம்மன்  கோயில்களில்  பிரதோஷம் பூஜை நடந்தது.
--

