/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் மகா கும்பாபிஷேகம்
/
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் மகா கும்பாபிஷேகம்
ADDED : பிப் 16, 2024 06:09 AM
கம்பம்: கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் அமைந்துள்ள ஏந்தார் குல தாயாதிகளுக்கு பாத்தியப் பட்ட வெங்கடாஜலபதி மற்றும் வீருசிக்கம்மாள் கோயில் திருப்பணி பல மாதங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து
மகா கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு யாக பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை பிரசன்ன வெங்கடாஜலபதி, மது விருசிக்கம்மாள் கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கணபதி,ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி, அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தித்தில் கப்பஜ்ஜி பசரிவார் குல தாய்மாமன்களும், பூசிவார் குல மருமக்கள் மார்களும், மணுக்கு சௌந்திரிய குல மருமக்கள்மார்களும், சம்பந்தகாரர்களும், பிறந்த வீட்டு பிள்ளைகளும், ஏந்தார் குல தாயாதிகளும் திரளாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ரெங்கராஜ், செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சிவாஜி மோகன், உபதலைவர் ரவி, துணை செயலாளர் முருகன், இணை செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் முத்துச்சாமி, கவுரவ தலைவர்கள் சுப்புராயர், குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன் , முருகேசன், விவசாய சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.