/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு பாதுகாவலராக மாறிய ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
/
மாணவர்களுக்கு பாதுகாவலராக மாறிய ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு பாதுகாவலராக மாறிய ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு பாதுகாவலராக மாறிய ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்
ADDED : ஆக 19, 2025 12:57 AM

மூணாறு; மூணாறு அருகே தென்மலை எஸ்டேட் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதுடன் பாதுகாவலர்களாக மாறி வருகின்றனர்.
தென்மலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் மக்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியின் அருகே அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி உள்ளது. அப்பகுதியில் யானை, காட்டு மாடு, சிறுத்தை, புலி உட்பட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளன.
அந்த பள்ளியில் வடமாநில தொழிலாளர்களின் பிள்ளைகள் 22 பேர் உட்பட 37 மாணவ, மாணவிகள் தமிழ் வழி கல்வி படித்து வருகின்றனர். தென்மலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் இருந்து ஒன்றரை, லோயர் டிவிஷனில் இருந்து இரண்டரை கி.மீ., தொலைவில் பள்ளி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வனவிலங்குகள் நடமாட்டத்தின் இடையே காடு, தேயிலை தோட்டம் ஆகியவற்றின் வழியாக நடந்து சென்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளி வளாகத்தினுள் இரவில் புலி நடமாடியது. மறுநாள் காலை புலி கால் தடத்தை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனவிலங்குகள் நடமாட்டத்தால் அச்சம் அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப சற்று தயக்கம் காட்டினர்.
அதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாதுகாவலராக மாறினர். வீடுகளில் இருந்து மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் அழைத்து வந்து மாலையில் வீட்டில் கொண்டு விடுகின்றனர். அது போன்று கடந்த வாரம் அழைத்துச் சென்றபோது காட்டு மாடுகளிடம் சிக்கி தப்பினர் என்பது குறிப்பிடதக்கது.