/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி
/
தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி
ADDED : ஏப் 20, 2025 11:54 PM

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ்.எஸ்.,புரம் அருகே சரக்கு வேன் -- தனியார் பஸ் மோதிய விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி வேன் டிரைவர் பலியானார்.
மதுரையில் இருந்து தேனிக்கு நேற்று மதியம் ஆண்டிபட்டியை கடந்து தனியார் பஸ் சென்றது. மதியம் 12:45 மணிக்கு எஸ்.எஸ்.புரம் அருகே சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆண்டிபட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள்,மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கொச்சி - - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

