/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டிஜிட்டல் கிராப்' சர்வே பணியில் இன்டர்நெட் கிடைக்காததால் சிக்கல்
/
'டிஜிட்டல் கிராப்' சர்வே பணியில் இன்டர்நெட் கிடைக்காததால் சிக்கல்
'டிஜிட்டல் கிராப்' சர்வே பணியில் இன்டர்நெட் கிடைக்காததால் சிக்கல்
'டிஜிட்டல் கிராப்' சர்வே பணியில் இன்டர்நெட் கிடைக்காததால் சிக்கல்
ADDED : நவ 17, 2024 06:25 AM
சின்னமனூர்: டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளில் மேகமலை பகுதியில் இன்டர்நெட் சேவை கிடைக்காததால, சர்வே செய்ய முடியாமல் வேளாண் மாணவிகள் திணறி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களிலும் டிஜிட்டல் கிராப் சர்வே பணி நடக்கிறது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் , வேளாண் துறையினரும் இதில் பங்கேற்றுள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகள் இன்டர்நெட் சேவை கிடைக்காத பகுதிகளில் சர்வே செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மேகமலை மலைப்பிரதேசம் என்பதால் இன்டர்நெட் சேவை முழுவதும் கிடைக்காது. எனவே மேகமலை பகுதியில் சர்வே எடுக்க முடியாத நிலை உள்ளது. வேளாண் துறையினர் கூறுகையில், மேகமலை போல் கடமலைக் குண்டு,பெரியகுளம், போடி மலை பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சர்வே பணி சிரமமாக உள்ளது என்கின்றனர்