/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பருத்தியில் தயிர்புள்ளி நோய் தாக்குதல் பேராசிரியர்கள் ஆய்வு
/
பருத்தியில் தயிர்புள்ளி நோய் தாக்குதல் பேராசிரியர்கள் ஆய்வு
பருத்தியில் தயிர்புள்ளி நோய் தாக்குதல் பேராசிரியர்கள் ஆய்வு
பருத்தியில் தயிர்புள்ளி நோய் தாக்குதல் பேராசிரியர்கள் ஆய்வு
ADDED : பிப் 18, 2024 01:36 AM
தேனி: பெரியகுளம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பருத்தி 600 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குள்ளப்புரம், கோவில்புரம் பகுதிகளில் பருத்தியில் நோய் தாக்குதல் உள்ளதாக வேளாண் துறைக்கு விவசாயிகள் புகார் கூறினர்.
அப்பகுதியில் வேளாண்துறையினர் , தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் முத்தையா, விஜயசாமுண்டீஸ்வரி கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பருத்தியில் தயிர்புள்ளி நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் ராலேரியா ஏரியோலா என்ற பூஞ்சை தாக்குதலால் ஏற்படுகிறது.
வேளாண் துறையினர் பேராசிரியர்கள் கூறுகையில், 'இந்நோய் அறிகுறிகளாக கோணவடிவ நீர் கோர்த்த புள்ளிகள் இலைகளின் நரம்புகளுக்கு இடையே தோன்றும், பின் சாம்பல் நிற புள்ளிகளாக மாறும். இலை நுனிகள் உள்நோக்கி காய்ந்து விடும்.
இந்நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மி.லி., புரோப்பிகனசோல் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளியில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் குளோரோதலோனில் கலந்து தெளித்தால் கட்டுப்படுத்தலாம்' என்றனர்.