/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புதர் மண்டிய 8 நீர் வரத்து வாய்க்கால்கள் துார்வார திட்டம்
/
புதர் மண்டிய 8 நீர் வரத்து வாய்க்கால்கள் துார்வார திட்டம்
புதர் மண்டிய 8 நீர் வரத்து வாய்க்கால்கள் துார்வார திட்டம்
புதர் மண்டிய 8 நீர் வரத்து வாய்க்கால்கள் துார்வார திட்டம்
ADDED : ஏப் 27, 2025 07:02 AM
தேனி : தேனி மாவட்டத்தில் புதர் மண்டி கண்மாய்,குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத எட்டு வாய்க்கால்கள் துார்வார நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளங்களுக்கு நீர்வரும் வாய்க்கால்களில் பல ஆண்டுகளாகி பராமரிப்பு இன்றி புதர்கள் மண்டி, களைச் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத வகையில் உள்ளது. இதனால் நீரின் போக்கு திசைமாறி கண்மாய், குளங்களில் முழுமையாக நீர் தேக்க முடிவதில்லை. விவசாயிகள் வரத்து வாய்க்கால்கள் துார்வார வேண்டும் என கோரி வருகின்றனர்.
தற்போது வாய்க்கால் துார்வரும் பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை தொடர்ந்து மே முதல்வாரத்தில் குறிப்பிட்ட சில கால்வாய்கள் துார்வாரும் பணி துவக்க உள்ளது. இத் திட்டத்தில் தேனி உபகோட்டத்தில் போடி புதுக்குளம் நீர்வரத்து வாய்க்கால், சின்னமனுார், மயிலாடும்பாறையில் தலா ஒரு வாய்க்கால்கள், உத்தமபாளையம் உப கோட்டத்தில் பூமலைக்குண்டு பாலகிருஷ்ணாபுரம் வாய்க்கால், தாடிச்சேரி-கொடுவிலார்பட்டி வாய்க்கால். பெரியகுளம் உப கோட்டத்தில் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை அருகே இரு வாய்க்கால்கள், வடுகப்பட்டியில் ஒரு வாய்க்கால் என மொத்தம் 8 வாய்க்கால்கள் துார்வரும் பணி துவங்க உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக கலெக்டர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.