
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வலியுறுத்தியும் தேனியில் நகர எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், பழைய பள்ளி வாசல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி நகரத் தலைவர் தமிம்அன்சாரி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் காதர் சுல்த்தான் வரவேற்றார். வட்டாரஜாமாத்துல் உலமா சபை செயலாளர் அமீன், வெல்பர் கட்சி மாவட்டத் தலைவர் முகமது சபி பேசினர். மாவட்டத் தலைவர் அபுபக்கர் சித்திக்,தேனி புதுப்பள்ளிவாசல் தலைவர் சர்புதீன், அல்லிநகரம் பள்ளிவாசல் தலைவர் ஜியாவுதீன்,ஜமாஅத்தே இஸ்லாமி ஷிந்த் தேனி வட்டத் தலைவர் அபுதாஹிர் ராஜா, தி.க.,மாவட்டச் செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.