/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுதி பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
விடுதி பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2025 05:09 AM
கூடலுார்: கூடலுார் ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியின் பெயரை சமூகநீதி விடுதி என அரசு பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் தலைமையில் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விடுதியை முற்றுகையிட்டு அங்கு 'சமூக நீதி விடுதி' என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றினர்.
தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
பெரியகுளம்: எ.புதுப்பட்டி கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு சீர் மரபினர் நலச்சங்கத்தினர் சார்பில், கள்ளர் விடுதிகள் பெயரை சமூகநீதி என பெயர் மாற்றம் அறிவிப்பை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.