ADDED : ஜூன் 10, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தேனி தாலுகா தர்மாபுரியில் 53குடியிருப்பாளர்கள் வீடு கட்டி 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை.
இதனால் பெரியகுளம் சப் -கலெக்டர்அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி தாலுகா பொறுப்பாளர்கள் பாஸ்கரன், மலர்கொடி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் ரஜத்பீடனிடம் மனு கொடுத்தனர். சப்-கலெக்டர், இடத்திற்கு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுங்கள். பட்டா வழங்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.