ADDED : நவ 06, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறில் மும்பையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணியிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறி மூன்று டிரைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தி பா.ஜ., மற்றும் பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் ஆகியோர் சார்பில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
முன்னதான நகரில் இருந்து போலீஸ் ஸ்டேஷனை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்தினர்.போராட்டத்திற்கு பி.எம்.எஸ்., தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன் துவக்கி வைத்தார். பா.ஜ., மாநில குழு உறுப்பினர் சுமேஷ், மண்டல துணை தலைவர் கதிரேசன், பொது செயலாளர் கந்தகுமார், பி.எம்.எஸ்., மூணாறு பகுதி பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

