ADDED : பிப் 16, 2024 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் ரவீந்திரநாத் எம்.பி., அலுவலகத்தில், ரவீந்திரநாத் எம்.பி., லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.68 லட்சம் மதிப்பீட்டில் எட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பெரியகுளம் நகராட்சி கச்சேரி ரோடு (தனியார் மண்டபம் எதிரே) ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின் விளக்கினை ரவீந்திரநாத் எம்.பி., இயக்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி அமைப்புச் செயலாளர் மஞ்சுளா, நகர செயலாளர் அப்துல்சமது, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், ராணி, நிர்வாகிகள் அன்பு, பொன் ரெங்கராஜ், முருகன், முருகானந்தம், ராஜகோபால், ஜெயபாபிரகாஷ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.--