/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுபார்கள் திறப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
/
மதுபார்கள் திறப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 10, 2025 05:28 AM
பெரியகுளம்: வடுகபட்டி, பெரியகுளத்தில் தனியார் மதுபார்கள் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
பெரியகுளம்  வடுகபட்டி மெயின் ரோட்டில் பேரூராட்சி சுடுகாடு அருகே முக்கரை விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் பெண்கள், பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.  கோயில் எதிரே உள்ள கட்டடத்தில்  மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபார்  நேற்று திறக்கப்பட்டது. மதுபார் திறந்ததற்கு  வடுகபட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் கூறுகையில்: இதே பகுதியில் போலி ஆவணங்கள் தயார் செய்து டாஸ்மாக் கடை,  திறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், நேற்று தனியார் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், மதுபார் ஆகியவற்றை ரத்து செய்யுமாறு கலெக்டர் ஷஜீவனாவிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் பெரியகுளம் வடகரை நவாப் ஜாமியா மஸ்ஜித் தலைவர் அப்பாஸ், வி.சி.க., மண்டல நிர்வாகி தமிழ்வாணன் தலைமையில் மனு அளித்தனர். மனுவில், 'பெரியகுளம் பஸ் ஸ்டாண்டை சுற்றி பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இந்த பகுதியில் தனியார் மதுபார் திறக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கோரியுள்ளனர்.-

